மிட்டாய் கவிதைகள்!

ஊழலற்ற இந்தியா!

August 12, 2012

83944 f260

ஏழை வீட்டு உலைக் கரியை
எடுத்து எப்படியோ மறைக்க
பதவி எனும் முகமூடியைத்
தேடித் திரியும் சிலர்!

முகமூடியைக் கழட்ட
முகம் தெரியா ஒருவர்
உண்ணாமல் முயல
‘முயலாமையின்’ அர்த்தம் தெரியா
வரும் காலத் தூண்களாய்
நாம் ஏன் அமைதியாய்?

தீப்பொறியாய் இருந்தபோதே
துளி நீரால் அணைத்திருக்க வேண்டும்..
தீப்பிழம்பாய் மாறிவிட்டது..!!
‘சுனாமி’யாய்க் கிளம்புவோம்
சுத்தமாக்க நம் நாட்டை!

‘அன்னா’வின் ‘பேரன்/பேத்தி’களாய்
நாமும் வரவேற்ப்போம்
ஊழலற்ற ‘இந்தியா’வை!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்